Thursday, April 16, 2020

First Aid In case of Choking

உணவையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அந்நிய பொருளையோ நீங்கள் விழுங்கும்பொழுது, அது உங்கள் மூச்சுக் குழலில் சிக்கிக்கொண்டு திணறலை ஏற்படுத்தக் கூடும். உடனடியாக அந்த பொருளை நீக்க நீங்கள் முயற்சிக்காவிட்டால். அது ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும்.



 First Aid In case of Choking






அந்த நபரால் பேச முடிய விட்டால் முதலுதவியாக 5 & 5 முயற்சியை மேற்கொள்ளவும். அந்த நபரின் பின்பக்கம் நின்று ஒரு கையை அவரது மார்புக்கு உதவியாகக் குறுக்கே வைக்கவும். தரைக்கு இணையாக அவரது உடலின் மேல்பகுதி இருக்கும் வகையில் இடுப்புக்கு அருகே குனிய வைக்கவும். அந்த நபரின் தோள்பட்டைக்கு நடுவே, உங்கள் கையின் ஒரு பகுதியால் 5 முறை அடிக்கவும், 5 முறை வயிற்றை அழுத்தவும். 5 முறை அடித்தல் மற்றும் 5 முறை அழுத்துதல் என மாறி மாறி அடைப்பு சரியாகும் வரை செய்யவும். வயிற்றின் மேற்புறம் அழுத்தம் கொடுக்கும் முறை “ஹெயிம்லிச் மேனுவர்” எனப்படும். வாயினுள் விரல்களை நுழைத்து சிக்கிக்கொண்டுள்ள பொருளை எடுக்க முயற்சிக்க வேண்டாம். இதனால், அது இன்னும் உள்ளே சென்று விடக் கூடும். முதலுதவி செய்யும்பொழுதே மருத்துவ உதவி பெற அழைக்கவும்.

No comments:

Post a Comment

10 Essential Tips for Effective Skin Cancer Prevention

Skin cancer is one of the most common cancers worldwide, but it is also highly preventable. Understanding the causes of skin cancer and tak...