Wednesday, May 6, 2020

A path to a Healthier Life. A patient’s Transformation

#PatientStory - Mr Natarjan | Hip Fracture | Kauvery Hospital Trichy Cantonment

என் பெயர் முருகானந்தன், என் அருகில் இருப்பவர் எனது தந்தை, பெயர் நடராஜன், வயது 97. கடந்த 15ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்து விட்டார். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். X-Ray எடுத்து பார்த்து விட்டு இடுப்பில் எலும்பு முறிவு என்று உறுதிப்படுத்தி, மாவுக்கட்டு போட வேண்டும் என்று கூறினார். ஆனால், அது உடனடியாக நிவாரணம் கிடைக்காது என்பதனால், திருச்சி காவேரி மருத்துவமனையில் உள்ள டாக்டர் சொக்கலிங்கத்தை எனக்குப் பரிந்துரை செய்தனர். இங்கு வந்ததும் அடுத்த நாள் எனது தந்தைக்கு அறுவைசிகிச்சை செய்தனர். இடுப்பில் எலும்பு முறிவு என்பதனால், அதனை Screw போட்டு Plate வைத்து சரி செய்தார்கள். இப்பொழுது அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றார். 

A path to a Healthier Life. A patient’s Transformation





வணக்கம்! நான் Dr.சொக்கலிங்கம் காவேரி மருத்துவமனையில் எலும்பு மூட்டு மருத்துவர். நீங்கள் பார்ப்பது 97 வயதான முதியவர் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்குபின் எழுந்து நடத்துக்கொண்டு இருக்கின்றார். எந்த இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது, இதற்கு என்ன சிகிச்சை நாங்கள் செய்கின்றோம், எப்படி அவரை இவ்வளவு சீக்கிரம் நடக்க வைத்தோம் என்பதனை பற்றி ஒரு நிமிடம் விளக்கம் தருகிறேன். இப்பொழுது நீங்கள் என் அருகில் பார்ப்பது ஒரு Hip Bone Model. தற்போது சிறப்பான Screw, Plates-எல்லாம் வந்துவிட்டது. உலக அளவில் Screw, Plates வைத்து அறுவை சிகிச்சை செய்வது இல்லையென்றால் பந்தய மாற்று அறுவை சிகிச்சை செய்வது மிகவும் வெற்றிகரமான அறுவை சிகிச்சை. இப்பொழுது நீங்கள் சந்தித்த 97 வயது முதியவருக்கு Plate and Screw வைத்து அறுவை சிகிச்சை செய்ததால், அவருக்கு எலும்பு முறிவு சரி ஆகிவிட்டது. மேலே பந்துக்கு ஒரு பெரிய Screw-வும், தொடைக்கு ஒரு Plate-ம் வைப்பதினால், பந்து, தொடை, எலும்பு எல்லாம் ஒன்று சேருவதால் அவருக்கு வலி உடனே போய்விடுகிறது. தற்போது என்ன செய்தி என்றால், இடுப்பு பந்து மூட்டுகளில் எலும்பு முறிவு ஆகின்ற வயதான முதியவர்களை வீட்டில் வைத்து கொள்ளாமல், விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுவந்தீர்கள் என்றால் அறுவைசிகிச்சை செய்து அடுத்த நாளே எழுந்து நடக்கவைக்கலாம். அவரும் வலி நிவாரணத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குத் திரும்புவார். நன்றி!



இப்பொழுது அவருக்கு 97 வயது ஆகின்றது. இந்த நிலைமையில் அவர் நடப்பாரா? என்று எங்களுக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், அறுவை சிகிச்சை செய்து மூன்று நாட்களில் நடக்க ஆரம்பித்து விட்டார். அது எங்களுக்குப் பெரிய மனத் திருப்தியாக இருக்கின்றது. We are Happy. இந்த வயதில் அவரும் துணிந்து இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். நாங்களும் துணிந்து இந்த முடிவை எடுத்தோம்.

அதனால், இன்று மகிழ்ச்சியாக வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகின்றோம். காவேரி மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருந்தது. Doctors, physiotherapist, Staff Nurse and Male Staff அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த மாதிரி யாருக்கு ஏற்பட்டாலும் தாராளமாக இங்க வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

Kauvery hospital

Cantonment

For Appointments

0431 4077777

No comments:

Post a Comment

Digital Detox: How Screen Time Affects Brain Function

In today’s hyper-connected world, reducing screen time has become just as important as staying updated. According to the Best Neurologist in...