Thursday, March 26, 2020

Your Creatinine levels define your kidney health


Creatinine and Kidney Health- Doc Talk Dr R.Balasubramaniyam, Kauvery Hospital(Chennai)

Your Creatinine levels define your kidney health




உங்க சிறுநீரகம் ஒழுங்கா இருக்கா இல்லையா அதனை எப்படி தெரிந்து கொள்வது. அதற்கு பண்ண கூடிய எளிமையான சோதனை இரத்தத்தில் “Creatinine” சோதனை. உங்க “Creatinine” எவ்வளவு இருக்குனு உங்களுக்கு தெரியுமா. நமக்கு இன்னிக்கு sensex எவ்வளவு இருக்குனு தெரியும், கிரிக்கெட்டில் ஸ்கோர் எவ்வளவு இருக்குனு தெரியும். நம்முடைய உடல் எப்படி இருக்கின்றது என்பது பற்றி நிறைய பேருக்கு தெரிவது இல்லை. இந்த விழிப்புணர்வை இந்த உலக சிறுநீரக தினத்தன்று(World Kidney Day) உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக. நாங்கள் கேட்கின்ற ஒரு கேள்வி உங்க “Creatinine” எவ்வளவு இருக்கு, எப்போ உங்க “Creatinine” நீங்கள் சோதனை செய்திர்கள். “Creatinine” என்பது உடலில் இருக்க கூடிய, செல்களை எல்லாம் உற்பத்தி பண்ண கூடிய ஒரு கழிவு பொருள். இந்த கழிவு பொருள் சிறுநீரகம் Normalஆக இருந்தது என்றால் அது உடம்பில் இருந்து வெளியேற்றி விடும். அப்பொழுது இரத்த பரிசோதனை பண்ணி பார்க்கும்பொழுது “Creatinine” என்பது Normalஆக  இருக்கும். Normal Creatinine என்பது 1 Milligram , சிறுநீரகம் சரியாக வேலை செய்ய வில்லை என்றால் “Creatinine” அளவு இரத்தத்தில் அதிகமாக இருக்கும். எந்த அளவு அதிகமா இருக்கின்றது என்பதனை எடுத்துக்கொண்டு. உங்களுக்கு இருக்க கூடிய சிறுநீரக வியாதி எந்த நிலையில் இருக்கு என்பதனை மருத்துவர்கள் முடிவு பண்ணுவார்கள். இது ஒரு சின்ன Catch என்னவென்று பார்த்தோம் என்றால். இந்த Creatinine Normal இருக்க கூடிய 1 Milligramல் இருந்து எப்போ அதிகம் ஆகும் என்று பார்த்தோம் என்றால். சிறுநீரகத்தில் வரும் பாதிப்பு 65 சதவிகிதம் மேல போகும்போது தான் “Creatinine” என்பது அதிகமாக ஆகின்றது. அதனால், Normal Creatinine இருந்தது என்றால் சிறுநீரகம் கண்டிப்பாக Normalஆக வேலை செய்கிறது என்று அர்த்தம் இல்லை. இந்த சோதனையை interpret பார்த்து ஜாக்கிரதையாக interpret பண்ணனும் என்பது ரொம்ப முக்கியம். யாரெல்லாம் இந்த சோதனையை பண்ண வேண்டும் என்றால் சர்க்கரை வியாதி இருப்பவர்கள், இரத்த அழுத்தம் இருப்பவர்கள், யாருக்கு எல்லாம் கை, கால்களில் வீக்கம் இருக்கோ, யாருக்கு எல்லாம் யூரின் போகுறதுல தொந்தரவுகள் இருக்கோ, யூரினில் இரத்தம் கலந்து போகுதோ, இந்த மாதிரி இருக்குறவங்க எல்லாருமே “Creatinine” பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. யாரெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கிறீர்களோ. அவர்கள் எல்லாம் “Master Health Checkup” பண்ணும்பொழுது இந்த “Creatinine” பரிசோதனை செய்து Creatinine Value Normalஆக இருக்கா என்பதனை தயவு செய்து பார்த்து கொள்ளவும். “Creatinine” பற்றி விழிப்புணர்வு உங்களுக்கு வேண்டும் என்கின்ற காரணத்திர்காக காவேரி மருத்துவமனையிலிருந்து டாக்டர் பாலசுப்ரமணியம் என்கின்ற நான் தலைமை சிறுநீரக மருத்துவராக இருக்கிறேன். இந்த வீடியோ மூலமாக உங்களுக்கு பண்ண கூடிய விழிப்புணர்வு விஷயம் என்னவென்றால் “Know Your Creatinine”. Thank You!


Kauvery hospital
Chennai
For Appointments
044 - 40006000

No comments:

Post a Comment

What are the Symptoms of Brain Tumour?

What is a brain tumor? A  brain tumour  is an abnormal growth of cells in the brain that can disrupt normal brain function. Tumours can be b...